தேனியில் பரபரப்பு.. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த முதியவரை கழுத்தை நெரித்து கதற கதற கொலை செய்த இளைஞர்..
ஓரினச்சேர்க்கைக்கு முதியவர் ஒத்துழைக்காத காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி சேர்ந்தவர் பொன்ராம். இவருக்கு வயது 75 இருக்கும். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்று ஒரு மகள் உள்ளார். இவர் அந்த ஊரில் இருந்த காவல் நிலையத்தில் தனது தந்தை மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் அவரை யாராவது கொலை செய்துருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் பொன்ராமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அப்பொழுது பரிசோதனையில் பொன்ராமை யாரோ ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்க வேண்டும் என்று ரிப்போர்ட்டில் வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் முதியவருக்கு தூரத்து சொந்தம் என்று கூறப்படுகிறது. போலீஸ் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு முன்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் போலீஸ் சந்தேகப்பட்டு அந்த இளைஞனிடம் கிடுக்குப்புடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது அதே கிராமத்தில் வசித்து வந்த அவரது நண்பரிடம் பல காலமாக ஓரினச்சேர்க்கையில் அந்த இளைஞன் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்நிலையில் அந்த நண்பருக்கு திருமணம் ஆகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சம்பவ தினத்தன்று முதியவரை பார்க்க இளைஞன் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு முதியவரை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு முதியவர் மறுத்ததால், கோவத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனால் முதியவரை கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளனர்.