சத்துமிக்க பாலக் பன்னீர் செய்வது எப்படி? சப்பாத்திக்கு கலக்கலான சைட் டிஷ்..!

புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் இன்று வரை நின்று வருகின்றது. இதனை வட மாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர். இவ்வகையான உணவை குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பார்கள். இதில் வைட்டமின் போன்ற ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. சுத்தமான பசுமையான கீரையுடன் பாலாடைகட்டியை கொண்டு காரசாரமாக தயாரித்து வருகின்றனர். வாங்க பாலக் பன்னீரை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-கீரை - 200 கிராம் தண்ணீர் - 1 கப் எண்ணெய் - 1 ஸ்பூன் வெங்காயம் - 1 கப் தக்காளி - 1 கப் பச்சை மிளகாய் - 1 ஸ்பூன் முழு முந்திரி பருப்பு - 4 உப்பு - 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்ப்ரஷ் க்ரீம் - 2 ஸ்பூன் அலங்கரிக்க பன்னீர் துண்டுகள் - 1 கப்

செய்முறை:-முதலில் கிரையை தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். பிறகு குக்கரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் கீரையை சேர்த்து வேக வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வதக்கிய பிறகு இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து கொண்டு மிக்சியில் நன்கு வழுவழுப்பாய் அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலாவினை கலந்து நன்றாக கிளறி கொதிக்க வைக்கவும். நன்கு வேக வைத்த கீரையை அறைத்து மசாலாவில் கலந்து கொதிக்க வைக்கவும். பிறகு நறுக்கிய பன்னீரை சேர்த்து சூடாக பரிமாறலம்.. காரசாரமான பன்னீர் பாலக் ரெடி..

More News >>