தனிக்குடித்தனம் தகராறு.. கடுப்பில் புதுமாப்பிள்ளை செய்த காரியம் என்ன தெரியுமா??
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மாதம் முன்பு பெரியவர்கள் முன் நிலையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் ஆன இரண்டு வாரங்களிலே வீட்டில் தனிக்குடித்தனம் பற்றி பேசப்பட்டுள்ளது. இது ராஜ் குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை பற்றி தினமும் பேசப்பட்டதால் ராஜ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியே சென்ற ராஜ் நெடுந்நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ராஜ் விஷம் குடித்து கோவில் வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார். இதை அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் ராஜ்குமார் தற்கொலை பற்றி அவரது குடும்பம், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகின்றது.