தேசிய உர உற்பத்தி ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய அரசின் கீழ் இயங்கும் மினி ரத்னா குழுமத்தில் இலாப நோக்கத்துடன் இயங்கும் பொது நிறுவனமான தேசிய உர உற்பத்தி ஆணையத்தில், பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 30
வயது: 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: Chemical, Mechanical, Electrical, Instrumentation, Civil மற்றும் Fire & Safety போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech./ B.E./ B.Sc. Engg ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Chemical Lab பணிகளுக்கு M.Sc (Chemistry) முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
கட்டணம்: General, OBC EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ ST/ PwBD/ ExSM/ Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: 21.01.2021க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://nflmtcbt.thinkexam.com/index.php
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/ADV--MT-(TECH)---2020.pdf