57 வயதில் திருமணம்.. திருமணத்தன்று 10,000 டாலர் பரிசு!
பிரிட்டன்: இங்கிலாந்தில் நாட்டில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் அனைவரும் சோகத்தில் உள்ள நிலையில் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். இங்கிலாந்து நாட்டின் விட்னெஸ் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் புர்செல் என்பவர் தனது 57 வயதில் தனது காதலி விக்டோரியா என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, மணமேடையிலேயே ரிச்சர்ட் புர்செலுக்கு மற்றொரு புதையல் கிடைத்தது.
தனது திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கால்பந்து போட்டிக்காக பரிசுக் கூப்பன் ஒன்றை ரிச்சர்ட் புர்செல் வாங்கி வைத்துள்ளார். இதனிடையே, திருமணத்தன்று ரிச்சர்ட் புர்செல் மணமகன் அறைக்கு சென்று தான் வாங்கிய வைத்த பரிசுக் கூப்பன் என்ன ஆச்சி என்று பார்த்துள்ளார். அதில், அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கால்பந்து போட்டிக்காக பரிசுக் கூப்பனில் ரிச்சர்ட் புர்செலுக்கு 10,000 டாலர் இந்திய மதிப்பில் சுமார் 9.89 லட்சம் பரிசு அடித்துள்ளது.
இதனால், மகிழ்ச்சியில் உச்சத்திற்கு சென்ற ரிச்சர்ட் புர்செல், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் பரிசு விழுந்ததை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திருமணத்திற்கு வந்த விருந்தினர் ரிச்சர்ட் புர்செல்க்கு டபுள் விஷஷ் என்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்து சென்றனர்.