சுவையான சீஸ் புரோக்கோலி செய்வது எப்படி??
புரோக்கோலி சத்துமிக்க உணவு வகைகளுள் ஒன்று. இதில் சூப், கிரேவி போன்றவற்றை சமைக்கலாம். சரி வாங்க சுவையான சீஸ் புரோக்கோலி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-நறுக்கிய புரோக்கோலி - 1 கப்ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்இஞ்சி- சிறிதளவு பூண்டு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - 1 ஸ்பூன்சீஸ் - 2 துண்டுகள்.
செய்முறை:-அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். சிறிதுநேரம் கழித்து புரோக்கோலி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
கடைசியில் துருவிய சீஸ் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். சூடான சீஸ் புரோக்கோலி தயார்.. இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சுவையும் அதிகம்,சத்தும் அதிகம்..