வேலைக்காரன் இசை வெளியீடு எப்போது ?
மோகன் ராஜா இயக்கத்தில் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான `கருத்தவென்லாம் கலீஜாம்’ மற்றும் `இறைவா’ உள்ளிட்ட இரு பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.