`எல்லா புகழும் கெய்லுக்கே..!-ராகுல் புகழாரம்
ஐபிஎல்-ன் 11-வது சீசனில் அதிவேக அரைசதத்தை அடித்துள்ளார் கே.எல்.ராகுல்.
இது குறித்து அவர் புகழாரம் சூட்டியுள்ளது கெய்லுக்கு. கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல்-ன் பத்தாவது சீசன் தொடங்கி வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. 10-வது சீசனின் 2-வது போட்டி அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், கம்பீர் தலைமையிலான டெல்லி அணிக்கும் இடையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. குறிப்பாக தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்த நல்லத் தொடக்கத்தால் பஞ்சாப் அணி, இலக்கை சுலபமாக கடந்தது. இது குறித்து பின்னர் பேசுகையில் ராகுல், `கிறிஸ் கெய்லுடன், பெங்களூரு அணியில் இருக்கும் போது பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவரிடம் ஒரு ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து அதிகமாக விவாதித்துள்ளேன்.
அப்போது, பந்தை அடிப்பதற்கு முன்னர் நேர்த்தியான முறையில் உடல் அசைவு இருந்தால், மற்றது தானாக நடக்கும். அதைத்தான், களத்தில் இருக்கும் போது செய்தேன். அது எனக்கு பலனளித்தது’ என்று கூறி கெய்லுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது கிறிஸ் கெய்லும் பஞ்சாப் அணியில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com