தலைவி படத்தை முடித்து வெளிநாடு பறந்த நடிகை.. பீச்சில் டூ பீஸில் காற்று வாங்கினார்..
நடிகைகளில் காஜல் அகர்வால், டாப்ஸி, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா போன்றவர்கள் கொரோனா ஊரடங்கு தளர்வில் விடுமுறை பயணமாக மாலத்தீவுக்குச் சென்று ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். கடலில் நீந்தியும் கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும். ஸ்பாக்களுக்கு சென்று ஹாட் பாத் குளியல் போட்டும் படங்களை பகிர்ந்தனர். தற்போது மற்றொரு பிரபல நடிகை படப்பிடிப்பை முடித்த கையோடு வெளிநாடு பறந்திருக்கிறார்.
நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் கற்றதுடன், உடலில் வெயிட் போட்டும் நடித்தார். இதற்கிடையில் கங்கனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக்கொண்டதற்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் தான் காரணம், பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் இலவசமாகப் போதை மருந்து சப்ளை செய்யப்படுகிறது எனவும் கூறினார்.
பின்னர் மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா மீது தாக்குதல் நடத்தினார். பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் போல் மும்பை உள்ளது என்றார். இதனால் சிவசேனா கட்சி தொண்டர்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பிற மது உணர்வைத் தூண்டி கலவரம் விளைவிப்பது போல் கங்கனா மெசேஜ் வெளியிடுவதாக கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்து கோர்ட்டை அணுகி இடைக் கால உத்தரவை கங்கனா பெற்றிருக்கிறார். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார்.
இந்த பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க அவரது குடும்பத்தில் நடந்த திருமண விழாவில் கங்கனா பங்கேற்றதுடன் ஐதாரபாத்தில் கடந்த மாதம் நடந்த தலைவி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார். கங்கனா தற்போது வெளி நாட்டுக்குப் பறந்துவிட்டார். மெக்ஸிகோ நாட்டிலிருக்கும் ஒரு கடற்கரை தீவிற்கு சென்றிருக்கிறார். அங்கு டூ பீஸ் உடை அணிந்து பீச் ஓரமாக அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதில். காலை வணக்கம் நண்பர்களே, நான் இதுவரை சென்றதில் மிகவும் பரவசமூட்டிய இடம் மெக்ஸி கோ. அழகான, கற்பனை செய்யமுடியாத இடம். துலும் என்ற கடற்கரை தீவிலிருந்து எனது புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறேன் என்றார். கங்கனா கடலை பார்த்தபடி முதுகு தெரிய டூ பீஸ் அணிந்திருக்கும் படம் ரசிகர்களை உசுப்பி உள்ளது.