அந்தரத்தில் மிதந்து தியான யோகாவில் அசத்தும் நடிகர்.. படத்தை வெளியிட்ட நடிகை..
நடிகர், நடிகைகள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற் பயிற்சி, யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். லாக்டவுனில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ராஷ்மிகா உள்ளிட்ட பல நடிகைகள் உடற்பயிற்சி, யோகா செய்யும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர். குறிப்பாக நடிகை சமந்தா இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
ஊரடங்கு காலத்தில் அவர் கிரியா யோகா பயிற்சி செய்ய கற்றுக்கொண்டு அதை தினமும் செய்யத் தொடங்கினார். தான் மட்டுமல்லாமல் தனது கணவர் நாக சைதன்யாவுக்கும் யோகா மீது ஆர்வத்தை தூண்டிவிட்டார். அவரும் சமந்தாவுடன் இணைந்து யோகா பயிற்சிகள் செய்து இருவரும் அதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டனர். கடினமான யோகா முறைகளை எளிதாகச் செய்கின்றனர்.
சைதன்யா தரையில் ஆங்காங்கே வைக்கப்பட்ட உருளைகள் மீது கால், கைகளை நீட்டியும். முதுகில் 3 கட்டைகளை முட்டுக்குக் கொடுத்தும் அந்தரத்தில் மிதப்பதுபோன்ற யோகா தியானப் பயிற்சி செய்து இளைப்பாறினார். அதைப் புகைப்படமாக எடுத்து சமந்தா பகிர்ந்திருக்கிறார்.சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யா பிறந்த நாளை கொண்டாடவும், விடுமுறை பயணமாகவும் மாலத்தீவு சென்றார். அங்கு ஸ்கூபா டைவிங் செய்த சமந்தா தனது பலவேறு வித புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் டூ பீஸ் நீச்சல் உடை மட்டும் அவர் பகிரவில்லை. ஏற்கன வே அவர் ஒருமுறை இதுபோன்ற கவர்ச்சி படத்தை வெளியிட்டபோது நாக சைதன்யா ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர். அதிலிருந்து நீச்சல் உடை படங்களை வெளியிடாமல் தவிர்த்து வருகிறார்.
மேலும் ஒடிடி தளத்துக்காக பிரபல நட்சத்திரங்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் பேட்டி எடுத்து வருகிறார். சிரஞ்சீவி, ராணா, தமன்னா எனப் பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். அது வைரலாக நெட்டில் பரவியது.சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.