ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவியை புறக்கணித்த நடிகர்.. நடிகை தந்த பதில் இதுதான்..
வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால் நடிகர், நடிகைகளுக்கு கேரவேன் எனப்படும் ஏசி வசதி மேக் அப் மற்றும் டாய்லெட் வசதிகளுடன் கூடிய வாகனம் கண்டிப்பாகத் தேவை. எளிய வசதி முதல் ஆடம்பர வசதிகள் கொண்ட வாகனம் வரை இதற்காக வரவழைத்து நடிகர், நடிகைகளின் மார்கெட்டுக்கு ஏற்ப ஒதுக்கி தரப்படுகிறது. இதில் ஜூனியர் நடிகர், நடிகைகள், சிறிய நடிகர்களுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. சில சமயம் இதில் பிரச்சனை ஏற்படுவதுண்டு. ஹீரோ, ஹீரோயின்கள் வசதியான கேரவேன் எதிர்பார்ப்பதுண்டு.
நடிகை சாய்பல்லவி ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்குச் சிறிய வாகனம் ஒதுக்கப்பட்டது. சேலை மாற்றக் கூட முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை கொண்டது. ஆனால் ஹீரோவாக நடித்த வருண் தேஜுக்கு பெரிய கேரவேன் ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து சாய் பல்லவி பட இயக்குனர் சேகர் கம்முலா விடம் புகார் கூறினார். தன்னால் சரியாகச் சேலை மாற்றிக்கொண்டு அடுத்த காட்சிக்குத் தயாராக முடியாத அளவுக்கு கேரவேன் சிறிய தாக உள்ளது என்றார். சாய் பல்லவியின் தர்ம சங்கடம் இயக்குனருக்கு புரிந்தது. உடனே பெரிய வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த விஷயம் நடிகர் வருண் தேஜுக்கு தெரிய வந்தது. உடனே அவர் தான் பயன்படுத்த ஒதுக்கிய பெரிய கேரவேனை சாய்பல்லவிக்கு தந்தார். அது சாய்பல்லவிக்கு வசதியாக இருந்தது.
இதுபற்றி சாய்பல்லவி கூறும் போது,எனது அசவுகரியம் பற்றி அறிந்த வருண் தேஜ் தனது கேரவேனை எனக்கு பயன்படுத்தத் தந்தார், அது பயன்படுத்த போதுமானதாக இருந்தது என்றார்.சாய் பல்லவி எளிமை விரும்பி தான். அதிக சம்பளம், பணத்திற்கு ஆசைப்படுவதில்லை என்பது திரையுலகினருக்குத் தெரியும். அதிக சம்பளம் கொடுத்து முக கிரீம் விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட அவர் ஏற்க மறுத்து விட்டார். தனக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். நிறையப் பட வாய்ப்புகள் வந்தபோதும் நல்ல பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிக்கிறார். இதனால் அவர் குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 பட ரவுடி பேபி பாடல் அதிக வியூஸ் பெற்று யூடியூபில் சாதனை படத்தது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி வெளியிட்ட தனுஷ் ஒரு போஸ்டர் வெளியிட்டர். அதில் சாய்பல்லவி இடம் பெறவில்லை, இது குறித்துச் சாய் பல்லவி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ரவுடிபேபி பாடல் ஹிட் ஆனதற்குச் சாய் பல்லவியின் நடனமும் காரணம் ஆனால் அவரது பெயரை தனுஷ் புறக்கணித்தது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சாய்பல்லவி கருத்து தெரிவிக்காமலிருந்தார். தற்போது அவர் அதற்குப் பதில் அளித்தார். ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் வெளியிட்டது அவரது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர். பாடல் அதிக வியூஸ் பெற்றது குறித்து தனுஷ் என்னை செல்போனில் அழைத்து பேசினார். இருவரும் மகிழ்ச்சி பரிமாறிக்கொண்டோம் என்று தனுஷுக்கு சாதகமாகப் பதில் சொல்லி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.