ஆவி பறக்கும் சாதத்தில், நெய் விட்டு உளுந்தம் பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்..

நாம் சில ஹோட்டலுக்கு சென்றால் முதலில் சாப்பாட்டிற்கு உளுந்தம் பொடி, நெய் ஆகியவை தான் இடப்பெறும். சில ஹோட்டல் உளுந்தம் பொடிக்கு என்றே பெயர் போனது. சரி வாங்க ஹோட்டலில் கிடைக்கும் உளுந்தம் பொடி போல நம்ம இனிமேல் வீட்டிலே செய்து அசத்தலாம்..

தேவையான பொருள்கள்:-வடித்த சாதம் - 2 கப்எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்கடுகு - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுநெய் - 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்துவரம் பருப்பு - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்மிளகாய் வற்றல் - 8பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:-முதலில் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, துருவின தேங்காய், மிளகாய் வற்றல், ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். பிறகு வறுத்த கலவையை ஆற விட்டு மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு உளுந்தம் பொடியில் சேர்த்து கொள்ளவும். பின்னர் தட்டில் சூடான வடித்த சாதத்தை இட்டு அதில் நெய், பொடித்த உளுந்தம் பொடி, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவை சும்மா அள்ளும்..

More News >>