அடுத்தது என்ன? ஜனவரி 3ல் மதுரையில் ஆலோசனை அழகிரி பேட்டி
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக முக அழகிரி தெரிவித்தார். கருணாநிதியின் இரு புதல்வர்களில் ஒருவரான ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆகிவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்து கோலோச்சிக் கொண்டிருந்த முக அழகிரி கலைஞர் மறைவிற்கு பிறகு ஓரம்கட்ட ஓரம்கட்டப்பட்டாரா? கட்சியில் அவருக்கு எந்த பதவியும் அளிக்கப்படாத நிலையில் அவரும் இத்தனை காலம் அமைதியாக இருந்து வந்தார்.
இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குமாறு ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியில் இணைவார் என்றெல்லாம் ஊகங்களை வெளியாகின. அதற்கும் எந்தவித ரியாக்சனும் அழகிரி தரப்பிலிருந்து இல்லை. இதனிடையே இன்று காலை சென்னை கோபாலபுரம் வந்த அழகிரி தனது தாயாரை சந்தித்துவிட்டு திரும்பினார். அப்போது வழிய வந்த அழகிரியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். வரவிற்கும் தேர்தலில் உங்கள் பங்கு என்ன? என்ற கேள்விக்கு வாக்களிப்பது கூட தேர்தலில் ஒரு பங்குதான் என்று ஆரம்பித்த அழகிரி.செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்.
அழகிரி சொன்னது: சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 3-ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன். ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரது பிறந்த நாள் அன்று அவரை சந்திக்கவில்லை. ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேசுவேன். தி.மு.க.வில் மீண்டும் சேரும்படி எனக்கு எந்த அழைப்பும் இல்லை. தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி இப்போது தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்ற ரீதியில் பேச ஆரம்பித்தது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது