செல்ஃபி எடுக்க 44 எம்பி காமிராவுடன் விவோ வி20 அறிமுகம்

விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அது அமேசான் இந்தியா இணையதளம் மூலம் விற்பனையாகிறது.மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சேமிப்பளவை 1 டிபி வரை கூடுதலாக்கும் வசதி உள்ளது.

விவோ வி20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.44 அங்குலம்; எஃப்எச்டி+; 2400X1080 பிக்ஸல் தரம்இயக்கவேகம்: 8 ஜிபிசேமிப்பளவு : 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்)முன்புற காமிரா: 44 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 730ஜிஇயங்குதளம் : ஃபன்டச் ஓஎஸ் 11; ஆண்ட்ராய்டு 11 (அடிப்படை)மின்கலம்: 4000 mAh

விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் ரூ.24,990/- விலையில் கிடைக்கும்.

More News >>