தனிக்கட்சி ஏன்... குடும்பத்தினரிடம் என்ன பேசினார் மு.க.அழகிரி?!
கடந்த சில நாட்களாக சென்னையில் முாகமிட்டுள்ள மு.க. அழகிரி கோபாலபுரத்திலுள்ள தனது தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்தார். தந்தையார் கலைஞரின் படம் முன்பு கண்களை மூடி அமைதியாக நின்றிருந்து தனது தனது மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அழகிரியை தயாளு அம்மாள் ஆசீர்வதித்தாம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி மனம் மாறியுள்ளதாக தெரிகிறது.
அவர் அளித்த பேட்டியில், என்னென்றால், செய்தியாளர்களிடம் பேட்டிளித்த அழகிரி, நான் என்ன செய்தேன். என்னைக் கோபக்காரன் என்கிறார்கள். இதுவரை பொறுமையாக இருந்தேன். வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துவிட்டது. எனவே, என்னை நம்பியுள்ள தொண்டர்களை நான் நற்றாற்றில்விட முடியுமா?. மு.க.ஸ்டாலினும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு அப்பறம், நான் சும்மா இருக்க முடியுமா? மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முக்கிய பதிவி வழங்குவதற்கு நான் தடையாக இருப்பேன் என்று நினைத்தார்கள். இப்படி தப்பு கணக்கு போடுகிறார்கள். உதயநிதி யார் என்று தம்பி மு.க.ஸ்டாலின் மகன்தானே. இதனை போன்று பல்வேறு விஷயத்தில் என்னை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது
என்று பிடிவாதமாக உள்ளனர். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். என் தரப்பில் உள்ள நியாயத்தை நான் சொல்லிவிட்டேன். பதிலைச் நீங்கள் சொல்லுங்கள். நான் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது என்றார்.
எப்போதும் தம்பி மு.க.ஸ்டாலினை மு.க.அழகிரி, எதிர்த்து தான் பேசுவார். அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்து அழகிரியிடம் சமாதானம் பேசுவார்கள். உடனே, அழகிரியும் விட்டுக்கொடுத்துப்போவார். ஆனால், இந்த முறை மனம் மாறியுள்ளதாக கருதப்படுகிறது. நடிகர் ரஜினியை சந்தித்துவிட்டு வருகிற ஜனவரி 3-ம் தேதியன்று, மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த மு.க. அழகிரி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.