வடபழனி கொலையில் திருப்புமுனை: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய குருக்கள் கணவன் கைது
சென்னை வடபழனியில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு பெண்ணை கட்டிப்போட்டு அடித்து உதைத்து கொலை செய்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ்(27). வடபழனி சிவன் கோயிலில் குருக்களாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஞானி பிரியா (24). இருவரும் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் பாலகணேஷ் கோயிலில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி பாலகணேஷ் கை கால்கள் துணியால் கட்டிய நிலையில் இருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பால கணேஷ¨ம் அவரது மனைவி ஞானி பிரியாவும் கை கால்கள் கட்டிப்போட்ட நிலையில் கிடந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டபோது, ஞான பிரியா இறந்துக் கிடந்தது தெரியவந்தது. மேலும், காயங்களுடன் இருந்த பால கணேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, கொள்ளையர்கள் வீடு புகுந்து தங்களை தாக்கிவிட்டு ஞானபிரியா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டதாக பாலகணேஷ் தெரிவித்தார்.
இருப்பினும், போலீசார் நடத்திய கிடுகிப்பிடி விசாரணையில் ஞானிபிரியாவை கொலை செய்தது குருக்கள் பாலகணேஷ் தான் என்பது தெரியவந்துள்ளது. பாலகணேஷ் தான் ஞான பிரியாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் பால கணேஷை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com