திருப்பதி கோயிலில் பெண்ணை 6 கி.மீ. தோளில் சுமந்தது சென்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

திருப்பதி: திருமலை திருப்பதி சென்ற பெண்ணை 6 கி.மீட்டர் தனது தோளில் போலீஸ் கான்ஸ்டபிள் சுமந்த சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தலூரைச் சேர்ந்த மங்கி நாகேஸ்வரம்மா (58) என்ற பெண் அன்னமய்யாபாதை வழியாக நடைபயணமாக திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி மலைப்பயணம் மேற்கொண்டபோது உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது நடைபயணத்தை தொடர முடியவில்லை.

இதற்கிடையே, பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் ஷேக் அர்ஷத் என்பவர் பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்த பெண்ணை கண்டு உதவிக்கரம் நீட்டினார். வயதான பெண்ணால் நடக்க முடியாது என்று அறிந்த கான்ஸ்டபிள் ஷேக் அர்ஷத், சுமார் 6 கி.மீ தூரத்திற்கு பெண்ணை தனது தோள்களில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். மேலும், வயதான நாகேஸ்வரராவ் என்பவரையும் கான்ஸ்டபிள் ஷேக் அர்ஷத் தனது தோளில் சுமந்து கொண்டு சாலையின் அருகே இறக்கிவிட்டார். கான்ஸ்டபிள் ஷேக் அர்ஷத்தின் சேவையை அறிந்து காவல்துறை உயர் அதிகாரிகளும், பக்தர்களும், பொதுமக்களுக்கும் அவரை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

More News >>