மாதவிடாய் குறித்து தெரிவிக்கவில்லை... மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்!
மாதவிடாய் குறித்து முன்னதாகவே தெரிவிக்காததால் மனைவியிடம் கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவருக்கும், ஆசிரியராக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடத்தது. இதற்கிடையே, மனைவியின் மாதவிடாய் குறித்து அறிந்த கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
இத தொடர்பாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்த அந்த நபர், தனது திருமண விழா முடிந்ததும் எனது மனைவியை பிரார்த்தனைக்காக கோயிலுக்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனால், கோயிலுக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மனைவி தனது மாதவிடாய் பற்றி என்னிடம் தெரிவித்தார். மனைவியின் மாதவிடாய் பற்றி அறிந்ததும் நானும், எனது தாயும் அதிர்ச்சியடைந்தாகவும், இந்த விவகாரத்தில் தங்களின் நம்பிக்கை மீறப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீட்டில் ஏசி வாங்கி வைக்க மனைவி கோரினாள். ஆனால், தன்னால் ஏசி வாங்க முடியாது என்று தான் மனைவிடம் தெரிவித்தபோது, எண்ணிடம் சண்டையிட்டு பெற்றோருடம் செல்வதாக தெரிவித்தார். அண்ணன் ஏற்கனவே வீட்டை கவனித்து வருவதால் வீட்டின் செலவிற்கு தான் பணம் கொடுக்கக்கூடாது என்று என்னை கட்டாயப்படுத்தினாள் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.