ரஜினிகாந்துக்கு கொரோனாவா?
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இதுல பாதி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கு கொண்ட ரஜினிகாந்த் படம் குழுவினரில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னை வரவில்லை. இதனிடையே இன்று காலை ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.
அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது அதன் காரணமாகவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.இதையடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ரஜினிகாந்த்துக்கு குற்றம் உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கிறது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்தார். செட்டில் இருந்த இரண்டு பேருக்கு கோவிட் -19 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்த்துக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்படவில்லை . இருப்பினும் அன்று முதல் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டார்.அவருக்கு கோவிட் -19 இன் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், அவரது இரத்த அழுத்தம் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் காட்டியது, அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த அழுத்தம் சீராகும் வரை வரை அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார். ஏற்ற இறக்கமான இரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என்று ஹைதராபாத்துக்கு அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.