கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள்: ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
பணியிடங்கள்: 13
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு - 02
அலுவலக உதவியாளர் - 10
இரவு காவலர் – 01
வயது: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30க்கு மிகாமலும், SC /ST பிரிவினருக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேரியவராக இருக்க வேண்டும். தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 வருடங்களுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,000 முதல் ரூ.62,000 வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 23.12.2020 முதல் 18.01.2021 வரை அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),A -பிளாக் , 3 வது தளம்,மாவட்ட ஆட்சியரகம்,வேலூர் – 632 009.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/2020122311.pdf