இந்தியாவிற்கு பெருமையை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்
பெண்கள் நெஞ்சைக் கொள்ளைக்கொண்டவரும், ரசிகர்களால் சாக்லேட் பாய், மேடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன்.
தமிழில், ஆண்டுக்கு ஒரு படம் என்று நல்ல கதையுள்ள படத்தை தேர்ந்தெடுத்து மாதவன் நடித்து வருகிறார். அதன்படி, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதற்கிடையே, நடிகர் மாதவனின் மகன் இந்தியாவிற்கு பதக்கம் வென்றுள்ளார். நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்ட வேதாந்த், அதற்கான பயிற்சியையும் பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்ட வேதாந்த் வெற்றிப் பெற்று பதக்கம் வென்றுள்ளார்.
இந்த தகவலை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது அதில், “இந்தியாவிற்காக வேதாந்த் முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது எனது மனைவி சரிதாவிற்கும் எனக்கும் பெருமையான தருணம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி ” என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com