2021 ஐபிஎல்லில் தான் களமிறங்குவாரா புவனேஷ்வர் குமார்.. என்ன நிலைமை?!

காயம் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் எந்த போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. டி20 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாடி வருகிறார். இதற்கிடையே, இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி தற்போது, பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி எடுத்து வருகிரார்.

இதற்கிடையே, புவனேஷ்வர் குமாரின் பயிற்சி ஜனவரி மாதம் முடிந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 தொடரில் தான் மீண்டும் விளையாட தொடங்குவார் என்றும் இதற்கு இடையே வேறு எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில், அடுத்த 6 மாதங்களுக்கு புவனேஷ்வர் குமார் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும், தனது பந்துவீச்சு முறையையும் மாற்றவும் இருப்பதால் தற்போதைக்கு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி வல்லுநர் ஹீத் மேத்யூஸ் தெரிவிக்கையில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு குறுகிய நாட்களிலேயே முதுகு வலி, இடுப்பு வலி, தசைப்படிப்பு, பின்இடுப்பில் வலி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வந்துவிடுகின்றன. இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீசும் முறையை மாற்றுவார்கள். புவனேஷ்வர் குமாரும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, தனது பந்துவீசும் முறையையும் மாற்ற பயிற்சி எடுத்து வருகிறார் என்றார்.

More News >>