அதிருப்தி இருந்தால் தெரிவித்திருக்கலாம்... முகமது அமீரின் ஓய்வு குறித்து இன்ஸமாம் வேதனை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இளம் வீரர் முகமது அமீரின் ஓய்வு அறிவிப்பு அணிக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல்ஹக் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் தனது 27 வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். மேலும், பயிற்சியாளர்கள் என்னிடம் நடந்து கொண்ட முறைதான் ஓய்வு அறிவிப்பதற்கான காரணம் மனம் திறந்து பேசினார். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறந்த இளம் பந்துவீச்சாளரை இழந்து விட்டதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், லாகூரில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல்ஹக், முகமது அமிர் ஓய்வு குறித்த துரதிருஷ்டமான முடிவு எடுக்கும் முன் தனக்கிருக்கும் வாய்ப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் அமிரின் ஓய்வு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கருதுகிறேன். இப்படியான சம்பவங்கள் நடக்காமல் தவிர்த்திருப்பதுதான் சிறந்தது.

இருப்பினும், முகமது அமிரின் ஓய்வு குறித்த முடிவு எந்நத மாதிரியான தாக்கத்தை அணியின் பந்துவீச்சு மற்றும் வலிமையில் ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து விளையாடி வருகிறோம். என்னைக்கு கவலை அளிப்பது, இதுபோன்ற சம்பவங்கள் எங்களின் அணியின் கிரிக்கெட், கிரிக்கெட் உலகில் எங்களின் தோற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். அணியில் உள்ளவர்கள் மீது அமீருக்கு அதிருப்தி இருந்திருந்தால், தலைமைப் பயிற்சியாளரிடம் தெரிவித்திருக்க வேண்டும். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி என செய்ய வேண்டும் என்று யோசனை செய்திருக்கலாம். யாருமே ஒத்துழைத்து செல்லவில்லை என்றால் அமீர் ஓய்வு அறிவித்திருக்காலாம் என்றும் தெரிவித்தார்.

More News >>