பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை 28ஆம் தேதி முதல் துவக்கம்
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.இணையவழியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே ரோப்காரில் அனுமதி.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரக்கூடிய பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வந்ததது. கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களாக ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் ரோப்கார் சேவை பிரத்தியேகமாக இயக்கப்பட்டு வந்ததது. இதற்குப் பக்தர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் ரோப் காரில் சேவை முழுமையாகத் துவக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது இருப்பினும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஆலய நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்தும், நாள் ஒன்றுக்கு 1500 பக்தர்கள் வரை ரோப் கார் மூலம் சென்றுவர அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரோப் கார் பயணத்திற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.