திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 4.39 கோடி ரூபாய் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகக் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். சில பக்தர்கள் கட்டுக்கட்டாக பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதும் உண்டு.நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் 42,800 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிலையில் 4.39 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.8 ஆயிரத்து 300 பக்தர்கள் தலை முடிக் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ 4.39 கோடி செலுத்தி உள்ளனர்.வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் இல்லாமல் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் நடத்தப்பட்டது.