மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு : 2400 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி
தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காகக் கடந்த நவம்பர் 1ம் தேதி தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு எழுதக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும்.இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய இந்த முதல் நிலைத் தேர்வில், 2400 பேர் பங்கேற்றனர்.இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக அரசுப் பணி அல்லது வங்கிப் பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலை தேர்வுகளில் ஒரு காலி பணியிடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தகுதி பெற்று வரும் நிலையில் மாவட்ட நீதிபதி பணியிடத்திற்கான தேர்வில் ஆறில் ஒரு பங்கு தேர்வர்கள் கூட தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது