ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தத்தால் அசாதாரண இரவு.. டாக்டர்கள் முழு ஓய்வு பரிந்துரை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நேற்று ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது. இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து 2வது அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவருக்கு நேற்று இரவு அசாதாரணமாக இருந்தது. ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆனால் நேற்றை விட இன்று கட்டுக்குள் உள்ளது. அவருக்கு நடந்த பரிசோதனையில் பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டி உள்ளது மாலையில் அதற்கான ரிசல்ட் கிடைக்கும்,ரத்த அழுத்தத்திற்காக அவருக்குத் தரப்படும் மருந்துகள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படுகிறது. தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவை என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவரை சந்திக்கப் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. பரிசோதனை முடிவைப் பொருத்தும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவதை பொருத்தும் அவரை டிஸ்சார்ஜ் செய்வதுபற்றி முடிவு மாலையில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் குஷ்பு மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஷூட்டிங் நடத்துவதற்கு 2 மாதத்துக்கு முன்பே அரசு அனுமதி அளித்தும் கொரோ னா பரவல் காரணமாக ரஜினி காந்த் ஷூட்டிங்கில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வந்தார். இதற்கிடையில் அவர் தனது கட்சி பற்றி அறிவிப்பு வெளியிட்டார். டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று கூறினார். இதையடுத்து டிசம்பர் 12ம் தேதி அவர் தனது 70வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
இதையடுத்து மறுநாள் ஐதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். நடிகை நயன்தாராவும் தனிவிமானத்தில் புறப்பட்டுச் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 40 சதவீத படப்பிடிப்பு பாக்கி இருந்ததால ரஜினிகாந்த், நயன்தாரா முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தனர். சுமார் 14 மணி நேரம் ரஜினிகாந்த் தினமும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.