விடுமுறை கொண்டாட்டம் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொரானா தொற்று காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி நீக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.எனினும் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கால விடுமுறை தினம் என்பதால் இன்று பிற்பகலில் குற்றாலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை திடீரென அதிகரித்தது.அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்த போதிலும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடிச் சென்றனர்.
எதிர்பாராத அளவிற்குக் கூட்டம் அதிகரித்ததால் கோரோனா கால கட்டுப்பாடு நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.குற்றாலத்தில் திடீரென சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்