விஜய் சேதுபதி வேடத்தில் இந்தி நடிகர் நடிக்கிறார்..
தமிழில் வெற்றி பெற்ற படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆகிறது. சூர்யா நடித்த கஜினி மற்றும் சிங்கம் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆனது. அதேபோல் இந்தியில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. இந்தியில், வெற்றி பெற்ற அந்தாதூண் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். பொன் மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். தியாகராஜன் தயாரிக்கிறார்.மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா.
இப்படம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. புஷ்கர் காயத்ரி இயக்கினர். இப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்திருந்தனர். இப்படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரிடம் பேசினர். பின்னர் அமீர்கானிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் திரைக்கதையில் அதிருப்தி தெரிவித்து நடிக்க மறுத்துவிட்டார். தமிழில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த பாத்திரத்துக்கு இந்தியில் ஹீரோவை தேடினார்கள். மாதவன் கதாபாத்திரத்துக்கு அவரையே நடிக்கக் கேட்ட போது ஒரே பாத்திரத்தில் இரண்டு முறை நடிக்க இஷ்டமில்லை என்று மறுத்து விட்டார்.
இதையடுத்து அந்த வேடத்துக்கு சயீப் அலிகானிடம் பேசியபோது அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது இயக்குனர்கள் மீண்டும் ஹிருத்திக் ரோஷனிடம் பேசியபோது அவர் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இதையடுத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்.மாதவன் வேடத்தில் நடிக்கும் சயீப் அலிகான் தமிழ், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தில் நடிக்கிறார். இதில் ராவணன் வேடம் ஏற்கும் சயீப் அலிகான், படத்தில் ராவணன் தரப்பிலான நியாயம் விவரிக்கப்பட உள்ளதாக கூறினார். இது சர்ச்சையானது. ராவணனைத் தீய சக்தியாக இந்துக்கள் எண்ணுகின்றனர். ராமரைத் தெய்வமாக வணங்குகின்றனர். ராவணனை தரப்பில் நியாயம் எதுவும் கிடையாது.
அதைப் படமாக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சயீப் அலிகான் தனது கருத்தை திரும்பப் பெற்றதுடன் மன்னிப்பு கேட்டார். விக்ரம் வேதா படத்தில் ஹிருத்திக் ரோஷன் சயீப் அலிகான் இணைந்து நடிக்கும் நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னிஷியன் தேர்வு நடக்க உள்ளது. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி ஏற்கனவே தமிழில் ஓரம்போ, வா குவார்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கினர்.