பிரபுதேவாவின் ldquoமெர்குரிrdquo படத்தின் த்ரில்லர் டிரெய்லர் ரிலீஸ்
பிரபுதேவா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்திருக்கும் படம் மெர்குரி. சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வசனங்களே இல்லை. பின்னணி இசையில் கதை நகருவது தான் படத்தின் ஹைலைட். ரம்யா நம்பீசன், ஷனத் ரெட்டி, தீபக் பரமேஷ், மேயாத மான் இந்துஜா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் பிரபுதேவா நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மெர்குரி படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகி உள்ளது. இந்த படம், வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த படத்தின் டிரைலர்:
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com