தற்கொலை செய்த நடிகையை குழந்தையாக்கி ரசிகர்கள் உருக்கம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த கடந்த 15 நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சாவுக்கு தாயும், கணவரும் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கணவர் ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சித்ரா மரண வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர் டி ஓ திவ்யஸ்ரீ விசாரணை தொடங்கினார். சித்ரா குடும்பத்தினர், ஹேமந்த் குமார் அவரது பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

அதன்பிறகு சித்ரா இறந்த ஓட்டலில் ஆர் டி ஒ விசாரணை நடந்தது. சித்ரா நண்பர்கள், உடன் நடித்தவர்கள், சீரியல் நடிகை சரண்யா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. சித்ரா மேனேஜர் ஆனந்தும் விசாரிக்கப்பட்டார். அவரிடம் இரண்டு மணி நேரம் ஆர்டிஒ விசாரணை நடத்தினார். ஆர்டிஒ விசாரணை அறிக்கையாக 250 பக்கம் தயாராகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனை பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனரிடம் வழங்குகிறார். அதன்பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் புகைப்படங்களை ரசிகர்கள் பேஸ் ஆப் மூலம் குழந்தை தோற்றத்துக்கு மாற்றி அதனை நெட்டில் பகிர்ந்து வருகின்றனர். சித்ரா திருமணத்துக்கு முந்தைய படம் முதல் நிச்சயதார்த்தம் வரையிலான படங்கள் சிறுமி தோற்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதைக் கண்டு ரசிகர்கள் உருக்கமாக மெசேஜ் பகிர்ந்து வருகின்றனர். சின்ன குழந்தையாக எவ்வளவு பொலிவுடன் அழகாக உள்ளீர்கள், நீங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன் என்று கேட்டு வருகின்றனர்.

More News >>