ஜெயம் ரவி பட டிரெய்லரை வைரலாக்கும் ரசிகர்கள்.. ஹீரோ கேரக்டர் என்ன?
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் படம் பூமி. லக்ஷ்மன் இயக்கி உள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடியில் வெளியாகுமா என்ற ஊசலாட்டம் இருந்து வந்த நிலையில் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக பிறகு விவசாயிகளுக்காகப் போராடும் போராளியாக எனப் பல அம்சங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஜெயம் ரவியின் அதிரடி வசனங்கள், சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாவது குறித்து ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது,பூமி திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இப்படம்.எனது திரைப்பயணத்தில் 25 வது படம் என்பதைத் தாண்டி, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன், ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது.
இப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறையப் பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து,எனது திரைப்படத்தைப் பார்த்து, பண்டிகையைக் கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திப்பதை, ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். பெரும் அன்புடனும், நிறைய நம்பிக்கையுடனும், என் திரைப்படத்துடன் உங்களைத் திரையரங்கில் சந்திக்கக் காத்திருக்கிறேன். கடவுள் நம்மை ஆசிர்வதிக் கட்டும் இவ்வாறு ஜெயம் ரவி கூறி உள்ளார்.பூமி படத்தின் டிரெய்லரை ஜெயம் ரவி ரசிகர்கள் நெட்டில் பகிர்ந்து வைராலாக்கி வருகின்றனர்.