ஜல்லிக்கட்டு: மேலும் சில நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர வேண்டும். வழக்கமாக ஜல்லிக்கட்டு காளைகளுடன் 5 முதல் 6 பேர் வரை வர அனுமதி உண்டு.
ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும்.அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
*ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்குப் போட்டி நடைபெறும் ஏழு நாட்களுக்கு முன்னர் பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்அடையாள அட்டை இல்லாத வீரர்கள் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க முடியாது.கொரோனோ தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் நடைமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக ஜல்லிக்கட்டு நடக்கும் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்
*ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய உள்ள அனைத்து துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனோ பரிசோதனை செய்து தொற்று இல்லை எனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.