முன்னாள் காதலருடன் ராஷ்மிகா மீண்டும் தொடர்பு..
திரையுலகில் காதல் ஜோடிகள் இணைவதும் பிரிவதும் அடிக்கடி நடக்கிறது. ரானா-திரிஷா ஜோடி டேட்டிங் செய்த நிலையில் பின்னர் பிரேக் அப் செய்துக்கொண்டனர். அதன் பிறகு தயாரிப்பாளர் வருண்மணியனுடன் திரிஷா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நாள் நெருங்கிய நிலையில் திருமணத்தை மறுத்து திரிஷா பிரிந்தார். நடிகை ராஷ்மிகா தெலுங்கு படங்களில் விஜய் தேவர கொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதற்கு முன்பே கன்னடத்தில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமண நிச்சயார்த்தமும் நடைபெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் ராஷ்மிகா ரக்ஷித் ஷெட்டியுடனான நிச்சயதார்த்தை ரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதையடுத்து ராஷ்மிகாவை ரக்ஷித் ஷெட்டி ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் அதன் பிறகு அவர் ரக்ஷித் ஷெட்டியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு தெலுங்கு படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தற்போது தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிப்பதுடன் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா, ரக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடித்த கிரிக் பார்ட்டி படத்தில் இடம் பெற்ற பாலகெட்டு என்ற பாடல் யூடியுபில் 100 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இது ராஷ்மிகாவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இதையடுத்து தனது மகிழ்ச்சியை இணைய தள பக்கத்தில் வெளிப்படுத்தி அந்த மெசேஜை முன்னாள் காதலன் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு டேக் செய்திருந்தார். அதற்கு ரக்ஷித் செட்டி பதில் அளித்திருக்கிறார். வளர்க வளர்க வளர்க பெண்ணே..
உன்னுடைய கனவுகள் நிஜமாகட்டும் என் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரேக் செய்துகொண்டு பிரிந்த காதலர்கள் மீண்டும் சமூக வலைதளத்தில் தங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டிருப்பதை ரசிகர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராஷ்மிகாவை தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து கிசுகிசுக்கிறார்கள். ஆனால் அதை ராஷ்மிகா மறுத்திருப்பதுன் விஜய் தேவர கொண்டாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறார்.ராஷ்மிகா தற்போது 2 இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சரித்திர படமொன்றில் நடிக்கும் ராஷ்மிகா அடுத்த அமிதாப்பச்சன் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். தந்தை மகள் கதை அம்சம் கொண்ட இப்படத்தை குயின்' படத்தை இயக்கிய விகாஸ் பாஹி இயக்க உள்ளார்.