உலாவரும் ஒற்றை யானையால் ஊர் முழுக்க திகில்..

கோவை அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து உலா வருவதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று உலா வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் செய்தனர். யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தடாகம் காவல் நிலையம் முன்புள்ள சாலையில் காட்டுயானை ஒன்று உலா வந்தது வந்துள்ளது. யானை அவ்வழியே செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

யானை வருவதற்கு ஒரு சில சில நொடிகளுக்கு முன் இருசக்கர வாகனத்தில் ஒருவர் செல்வது பதிவாகியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்தவர் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார். அப்பகுதிகளில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். யானை நடமாட்டம் குறித்து குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் இன்று காலை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

More News >>