ஜல்லிக்கட்டு நடத்த எதற்கு மல்லுகட்டு?
ஜல்லிக்கட்டு போட்டிக்கான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு காளை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜனவரி மாதம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் நடக்க உள்ளது . இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதிதாக பல விதிகளை அரசு வெளியிட்டது. இதற்கு காளை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஜல்லிக்கட்டு களத்திற்கு ஒரு காளை மாட்டுடன் காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் முதல் ஆறு பேர் வந்த நிலையில் இனி இருவருக்கு மட்டுமே அனுமதி , அந்த இருவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இது ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான காளை மாடுகள் தயாராகி வருகின்றது.
நாள்தோறும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, உரிப்பாய்ச்சுதல், சத்தான உணவு வழங்குதல் என காளை உரிமையாளர்கள் தீவிரமாக தங்களது காளைகளை தயார் படுத்தி வருகின்றனர். ஏற்கனவே காளை மாடுகளை தயார் படுத்துவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வரும் காளை உரிமையாளர்கள் தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா பரிசோதனைக்குச் என்றால் அதற்கும் கூடுதலாக கஷ்டப்பட வேண்டியுள்ளது என்றும், எனவே தமிழக அரசு இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது சாத்தியமில்லை எனவும் காளை உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.