பிரபுவுக்கு திடீர் வாழ்த்து சொன்ன குஷ்பு.. என்ன காரணம்?
திரைப்படங்களில் சில ஜோடிகள் ரசிகர்கள் மனதில் நீங்காமல் பதிந்துவிடும். எம்ஜிஆர்-ஜெயலலிதா, சிவாஜி-பத்மினி, ரஜினிகாந்த் -கவுதமி, கமல்-மாதவி, விஜய் -திரிஷா என ராசியான ஜோடிகளாக அமைவதுண்டு. அந்த வகையில் 90களில் பிரபு- குஷ்பு ஜோடி திரையுலகில் வலம் வந்தது. அவர்கள் இணைந்து நடித்த வெற்றி விழா, சின்னதம்பி, தர்மத்தின் தலைவன், மறவன், சின்ன வாத்தியார், பாண்டி துரை, உத்தம ராசா, மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுவும் வந்தது. ஆனால் குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்தார். ஆனால் பிரபு - குஷ்பு இருவரும் நட்போடு இருக்கின்றனர்.
எங்காவது விழாக்களில் சந்தித்தால் நலம் விசாரித்துக் கொள்வதுண்டு. ஆனால் அவர்கள் இருவரும் சமீபத்தில் ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பிரவுக்கு திடீர் வாழ்த்து மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய அற்புதமான இணை நடிகர்- வாழ்க்கை நண்பர் இளைய திலகம் பிரபுவுக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிர்வதிப்பட்டவராகவும் ஆரோக்கியமுடனும் சந்தோஷத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். பிரபுவுக்கு இந்த மாதம் 31ம் தேதி பிறந்த நாள். ஆனால் முதல் ஆளாக முந்திக் கொண்டு 4 நாட்களுக்கு முன்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
குஷ்பு தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபு நடிக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குஷ்பு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக கட்சியில் இணைந்தார்.