பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய 4 பேர் திடீர் மாயம்
பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை உதவியுடன் சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் பிரிட்டனிலிருந்து மதுரைக்கு 80 பேர் திரும்பியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது இதில் 76 பேரை சுகாதாரத் துறையினர் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அதேசமயம் மீதமுள்ள நான்கு பேரை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. நான்கு பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை காவல் துறையினரின் உதவியுடன் சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.
4 பேருடைய முகவரியில் சென்று விசாரித்தபோது அவர்கள் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. தேவையற்ற அச்சம் காரணமாக வேறு எங்காவது சென்றிருக்கலாம் என சுகாதார துறை அதிகாரிகள் கருதுகின்றனர். அடையாளம் காணப்பட்ட 76 பேரில் கொரோனோ அறிகுறியுடன் இருந்த 26 பேரை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உறுமாறிய கொரோனோ பாதிப்பா என்பதை அறிய அவரது சளி மாதிரி புனேவிற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.