ஒரு வழியாக நிறைவேறியது- பெருமூச்சுவிடும் இந்திய ராணுவத்தினர்

இந்திய ராணுவத்தின் நீண்ட நாள் கோரிக்கையான வீரர்களுக்கான புல்லட் ப்ருஃப் அங்கி விரைவில் வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் உள்ள ராணுவ வீரர்கள் முக்கியமான போர் சூழலின் போதும் தாக்குதல்களின் போதும் வீரர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் ஒருவித மேல் அங்கிதான் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அரசிடம் இதற்கான கோரிக்கை மனு நிலுவையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கவசத்துக்கான நிதி ஒதுக்கீடை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் இன்று ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளது மத்திய அரசு. இத அடிப்படையில் 1.86 லட்சம் பாதுகாப்பு கவசங்களுக்கான ஆர்டர் 639 கோடி ரூபாய் செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இதுபோலவே 50ஆயிரம் பாதுகாப்பு கவச ஆடைகளுக்கான ஆர்டர் இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அதற்கான எந்தவொரு பதிலோ, கவசமோ இதுவரையில் ராணுவத்தால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>