ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆனார், ஒருவாரம் முழு ஓய்வு டாக்டர்கள் குழு அறிக்கை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கடந்த 25ம் தேதி ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துமனை அறிக்கை தெரிவித்தது. நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து 2வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது: ரஜினிகாந்த் 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவருக்கு நேற்று இரவு அசாதாரணமாக இருந்தது. ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆனால் நேற்றைவிட இன்று கட்டுக்குள் உள்ளது. அவருக்கு நடந்த பரிசோதனையில் பயப்படும் படி எதுவும் இல்லை.
இன்று மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டி உள்ளது மாலையில் அதற்கான ரிசல்ட் கிடைக்கும். ரத்த அழுத்தத்திற்காக அவருக்கு தரப்படும் மருந்துகள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படுகிறது. தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவை என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. பரிசோதனை முடிவை பொருத்தும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவதை பொருத்தும் அவரை டிஸ்சார்ஜ் செய்வதுபற்றி முடிவு மாலையில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஜினி டிஸ்சார்ஜ் ஆனார். ரஜினிகாந்துக்கு இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அவர் மருத்துவ பரிசோதனையில் வைத்து கண்காணிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவரது ரத்த அழுத்தம் சீரானது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலை நல்ல நிலைக்கு வந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரது வயது, உயர் ரத்த அழுத்தம், மாற்று அறுவை சிகிச்சை நிலையை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.1) ஒரு வார காலத்துக்கு முழு ஒய்வில் ரஜினிகாந்த் இருக்க வேண்டும். அவரது ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.2)உடல் ரீதியான செயல்பாடுகள் குறைத்துக்கொண்டு, அழுத்தங்களை தவிர்க்க வேண்டும். இந்த பரிந்துரைகள் கருத்தில் கொண்டு கோவிட் 19 காலத்தில் அவர் ரிஸ்க்கான பணிகளை தவிர்க்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.