ஐசிசி ன் சர்வதேச இருபது ஓவர் கனவு அணியில் இந்திய வீரர்கள்!
ஐசிசி சர்வதேச இருபது ஓவர் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுகளில் இருபது ஓவர் போட்டிகளில் தங்களின் அசைக்க முடியாத அசாத்திய திறமையால், தனக்கான இடத்தை மிக ஆழமாக பதிவு செய்த அசாத்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த கனவு அணியில் இந்திய அணியில் இருந்து மட்டும் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் போக்கை தனது அசாத்தியத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.
சசசினுக்கு பிறகு இனி இந்தியா தோற்றுவிடும் என்ற நிலையை மாற்றி, நான் இருக்கிறேன் பொறுத்திருங்கள் வெற்றியை தருகிறேன் என தனது அதிரடியால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 2007 ல் நடந்த இருபது ஓவர் உலக கோப்பை போட்டியை வென்று நாட்டையே பெருமைப்பட வைத்த, சென்னையின் செல்லப்பிள்ளை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகன் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இடம் பிடித்துள்ளார். இது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கனவு அணியில் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பும்ரா இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஆரோன் பின்ச் மற்றும் மேக்ஸ்வெல், மேற்கு இந்திய அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் மற்றும் பொல்லார்ட், ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ரஷித் கான், தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் இலங்கை அணியில் இருந்து மலிங்கா இடம் பெற்றுள்ளனர். இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கெய்ல். அடுத்து பின்ச் மற்றும் கோலி, டிவில்லியர்ஸ், தோனி, மேக்ஸ்வெல், பொல்லார், ரஷித் கான், பும்ரா மற்றும் மலிங்கா என்ற வரிசையும் வெளியிடப்பட்டுள்ளது.