காஜல் பாணியில் தேனிலவு பறந்த மற்றொரு நடிகை..
கொரோனா ஊரடங்கு தளர்வில் திருமணம் செய்த பிரபலங்களில் காஜல் அகர்வால் ஒருவர். கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்த அவர் பிறகு தேனிலவுக்காக கணவருடன் மாலத்தீவு பறந்தார். ஒரு மாத காலம் ஜாலியாக பொழுதைக் கழித்தவர் சினிமா பாணியில் கணவருடன் கட்டிப்பிடித்தும், கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்தும். ரம்யமான இடங்களில் ஜோடியாகச் சுற்றித்திரிந்தும் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதேபோல் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபு மகளான இவருக்கும் சைதன்யா ஜொன்னலகடாவுக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. கொரோனா ஊரடங்கில் நடந்த காஜல் அகர்வால் திருமணம் உள்ளிட்ட பல திருமணங்கள் எளிய முறையில் நடந்து முடிந்தது. ஆனால் நிஹாரிகா திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதப்பூரில் உள்ள அரண்மனை நட்சத்திர ஒட்டலில் தடபுடலாக நடந்தது.
இதில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் உள்ளிட்ட சிரஞ்சீவியின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொண்டது. திருமணத்துக்குப் பிறகு இரவில் திருமண வரவேற்பு நடந்தது பிறகு திருமண ஜோடி ஐதராபாத் வந்ததும் அங்கும் ஒரு திருமண வரவேற்பு நடந்தது. கடந்த சில நாட்களாக நிஹாரிகாவும் சைதன்யாவும் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் இருவரும் தேனிலவுக்கு மாலத்தீவு புறப்பட்டனர். மாலத்தீவு தேனிலவு புறப்படுவதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிஹாரிகா விமான டிக்கெட்களையும் பகிர்ந்தார்.
மாலத்தீவில் எவ்வளவு நாள் தேனிலவு என்பது பற்றி குறிப்பிடாவிட்டாலும் காஜல் போல் ஒரு மாத காலம் கொண்டாடலாம் என்று தெரிகிறது. பிறகு ஐதராபாத் திரும்பும் ஜோடி சைதன்யாவை சினிமாவில் ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.