வேலு நாச்சியார் ஆகும் பிரபல ஹீரோயின்..
பிரபாஸ் நடித்த பாகுபலி, சேரா நரசிம்ம ரெட்டி, பத்மாவதி, மணிகர்ணிகை போன்ற சரித்திர படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகின்றன, தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தயாரிப்பில் உள்ளது. இதில் அமிதாப்பச்சன், விக்ரம். ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் 2 கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தடைப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் இப்படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.
அதன்பிறகு வீடு திரும்பிய அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஜனவரி மாதம் முதல் அவர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. சமீபத்திய தகவல் என்ன வென்றால், இயக்குனர் சுசி கணேசன், ராணி வேலு நாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை உருவாகத் திட்டமிட்டுள்ளார். வேலு நாச்சியார் வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.ராணி வேலு நாச்சியார் 1780 முதல் 1790 வரை சிவகங்கை ராணியாக இருந்தார். தமிழர்களால் வீரமங்கை என்று அழைக்கப்பட்ட இவர், கிழக்கு இந்தியாவுடன் போர் தொடுத்த முதல் இந்திய ராணி இந்தியாவில் நிறுவனம்.
தெலுங்கு வரலாற்றுப் படமான சிரஞ்சீவி நடிப்பில் உருவான சேரா நரசிம்ம ரெட்டியில் நயன்தாரா நடித்திருந்தாலும் வேலு நாச்சியார் படத்தில் அவருக்குப் பிரதான வேடம் அமைந்திருக்கிறது. இப்படத்தின் பாக்ஸ் போஸ்டர்கள் நெட்டில் வெளியாகி உள்ளது.நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் அண்ணாத்தே, நெற்றிக்கண், மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் சுசி கணேசனின் கடைசியாக திருட்டுப்பயலே 2ம் பாகம் இயக்கினார். இப்படம் ஏற்கனவே ஜீவன், சோனியா அகர்வால் நடிப்பில் வெற்றி பெற்ற திருட்டுப் பயலே படத்தின் தொடர்ச்சியாக உருவானது. திரைப்படத் தயாரிப்பாளரின் தரப்பில் வேலு நாச்சியார் படம் பற்றி இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த படம் தீவிர பரிசீலனையில் உள்ளது என்றும், நட்சத்திர தேர்வு, மற்றும் பட்ஜெட் கணக்கீடு நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், வாழ்க்கை வரலாறு மற்றும் வரலாற்றுத் திரைப்படங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பாகுபலி (1 மற்றும் 2) முதல் பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, மணி கர்னிமா, ருத்ரமாதேவி, தன்ஹாஜி வரை பல வரலாற்றுப் படங்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், ஒரு காலத்தில் புராண திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற தமிழ் சினிமா, தற்போது வரலாற்றுப் படங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பி இருக்கிறது. அதேபோல் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர். நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா போன்ற பல படங்கள் உருவாகி வெற்றி பெற்றன. தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.