சிம்லா, காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. சுற்றுலா பயணிகள் அவதி..
சிம்லாவில் நேற்று(டிச.27) அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், அந்நகரம் முழுவதும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிர்தாங்காமல் முடங்கிப் போயுள்ளனர்.இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும். சில சமயங்களில் மழையும் பெய்யும். தற்போது இமாச்சலப் பிரேதசத்தில் சிம்லா, கேலாங், கல்பா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
சிம்லாவில் நேற்று(டிச.27) அதிகமான பனி கொட்டியது. இதனால், நகர் முழுவதும் சாலைகளில் பனி படர்ந்து, சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் லாட்ஜுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், வானிலை ஆய்வு மையம் இன்று(டிச.28) பனிப்பொழிவுடன் மழையும் பெய்யலாம் என்று எச்சரித்துள்ளது. இதே போல், ஜம்மு காஷ்மீரிலும் டிச.12ம் தேதி முதல் பனிப்பொழிவு காணப்படுகிறது. அங்கும் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியிலும் தற்போது கடுங்குளிர் நிலவுகிறது.