ஜனவரி 13-னிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்... அரசு உத்தரவு
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியுள்ளது. டிசம்பர் 30-ஆம் தேதியுடன் டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும்.
ஜனவரி 4ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும்.அவ்வாறு குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.