அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை.. முதன்முறையாக வாய் திறந்த கிம்!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

அபரிமிதமான அணு ஆயுத சோதனையால் வடகொரியா – தென் கொரியா இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால், தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அடுத்த மாதம் சந்திக்க உள்ளதால், உலக நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் நிலவி வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்கா, வடகொரியாவுக்கு ஒரு நிபந்தனையை வைத்தது.

`வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கைவிட்டால்தான் சுமூகப் பேச்சுவார்த்தைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்’ என்று கோரிக்கை விடுத்தது அமெரிக்கா. இதுநாள் வரை வடகொரியா இது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், தற்போது வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முன்வந்துள்ளது குறித்து அந்நாட்டு அதிபர் கிம் பேசியுள்ளார். வடகொரியாவில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இந்த விஷயம் குறித்து கிம் பேசியுள்ளார்.

`தென்கொரியாவுடனும் அமெரிக்காவுடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்துள்ளார்’ என்று வடகொரிய அரசின் அதிகாரபூர்வ ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>