காமெடி நடிகருக்கு குவா குவா..
திரையுலகில் இன்றைக்கு காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் யோகிபாபு. லொள்ளு சபாவில் தொடங்கி பல படங்களில் பலரில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்தவர். படிப்படியாக வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். காமெடி நடிகர் வடிவேலு தமிழில் உச்சகட்ட காமெடியனாக வலம் வந்துக்கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காமல் உள்ளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். அதில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் வடிவேலு. ஒரு கட்டத்தில் வடிவேலுக்கும் படக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அப்போது புகார் அளிக்கப்பட்டது. இதில் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதை ஏற்காமல் வடிவேலு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் யோகிபாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அவர் பிஸி காமெடியானாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். யோகிபாவுக்கு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மஞ்சு பார்கவி என்பவரை மணக்க முடிவானது. இவர்கள் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் குலதெய்வம் கோவிலில் நடந்தது.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்நிலையில் யோகிபாபுவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. திரையுலகினர் அவருக்கு வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர். நண்பன் யோகிபாவுக்கு ஆண் குழந்தை.. மிகவும் மகிழ்ச்சி.. தாயும் சேயும் நலம் என நடிகர் மனோபாலா தெரிவித்திருக்கிறார். யோகிபாபு காமெடியானாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா அவருக்கு ஹைலைட்டாக அமைந்தது.