பரவாயில்லை ஜடேஜா... ரசிகர்கள் மனதில் நின்ற ரஹானே!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது. நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ரகானே அபாரா விளையாடினார். அபாரமாக விளையாடிய கேப்டன் ரஹானே சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 12வது சதமாகும். மெல்போர்ன் மைதானத்தில் ரகானே தனது 2வது சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் (91.3 ஓவர்) குவித்துள்ளது. ரகானே (200 பந்து, 12 பவுண்டரி) 104 ரன் எடுத்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் ரஹானே பெரிய அளவில் வளர்ந்துள்ளார். தொடர்ந்து, இன்று ரஹானே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 112 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார்.
ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிள் ஒன்றுக்கு ரஹானேவை அழைக்க ரஹானே ரன் அவுட் ஆனார். ஆனால் ரன் அவுட் ஆனதால் கோபமடையாமல் பெவிலியன் செல்லும் போது ஜடேஜாவிடம் பரவாயில்லை நீ தொடர்ந்து நன்றாக ஆடு என்ற ரீதியில் செய்கை செய்து விட்டுப் போனார். ஜடேஜாவின் தவறினால் ரஹானே ரன் அவுட் ஆனார். ஆனால் ரஹானே ஜடேஜாவை அங்கேயே சமாதானப்படுத்தியது ரசிகர்களின் மனதில் நின்றுள்ளார்.