பாகிஸ்தானை விட மோசமான எதிரியா தமிழ்நாடு? - மத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி கேள்வி

பாகிஸ்தானுக்கு தண்ணீரை வழங்கு முடியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என்றால், பாகிஸ்தானை விட மோசமான ஒரு எதிரியாக தமிழ்நாட்டை மத்திய அரசு கருதுகிறது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக்கான பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத, அரசியல் சாசன உரிமையை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு அரசை நாங்கள் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? எதற்காக இந்தியாவிற்கு நாங்கள் வரிகொடுக்க வேண்டும்? எதற்காக இந்திய அரசின் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எதற்காக இந்தியாவின் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

பாகிஸ்தானுக்கு சிந்து ஒப்பந்தத்தின் மூலமாக தங்கு தடையற்ற தண்ணீரை வழங்கு முடியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என்றால், பாகிஸ்தானை விட மோசமான ஒரு எதிரியாக தமிழ்நாட்டை மத்திய அரசு கருதுகிறது. ஆக, பாகிஸ்தானுடன் கூட நட்பு பாராட்டி தண்ணீர் வழங்கும் மத்திய மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரவில்லையென்றால், தமிழ்நாட்டை அண்டை நாடாக இந்திய அரசு நடத்துகிறது.

அப்படி தமிழ்நாட்டை அண்டை மாநிலமாக கருதும் என்றால், நாங்கள் மத்திய அரசு அலுவலகங்களை தூதரகங்களாக இருப்பதாக தான் உணரவேண்டி உள்ளது. இந்த வகையில் தமிழகத்துக்கு தேவையானது 166 டி.எம்.சி. அல்ல; 360 டி.எம்.சி. என்பது எங்கள் உரிமை. 360 டி.எம்.சி. வழங்கப்பட வேண்டும். அதற்கு நர்மதா அணை அமைக்கப்பட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>