ஜனவரி 1 முதல் வாட்ஸ் அப் இயங்காதா?
வரும் ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயல்களில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்ப மேம்பாடு என்ற அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது .அதன்படி சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது என்று அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் இப்படி அறிவிப்பது இது முதல் முறையல்ல. அவ்வப்போது இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.ஐ போன்களில் iOS9 என்ற மென்பொருளுக்கு முந்தைய வெளியீட்டு மென்பொருளைப் பயன்படுத்தும் அதாவது ஐபோன் 4 மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
அதேபோல் 4S, 5, 5S, 5C, 6 , 6S போன்களை மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் வாட்ஸ்-அப் வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.இதேபோல் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆண்ட்ராய்டு 4.0.3 என்ற பதிப்புக்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது.அப்படியானால் இந்த ரக போன்களில் இதுவரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தியவர்கள் என்ன செய்வது? பேக்கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பாக என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் வாட்ஸ்அப் வேலை செய்யும் வேறு போன்களை வாங்குவது தான் ஒரே வழி.